
வெளிநாட்டுப் பணம் இலங்கையில் இருந்து வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கான புலம்பெயர் கொடுப்பனவினை தமது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைப்பது வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் ஆகியன தொடர்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் தனக்குறிய அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.