கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 4 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒபேசேகரபுர 515சி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் ரபர்வத்த கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவாகளை தோட்டத்தின் மேற்பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.