July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாற்றுத் திட்டம் உள்ளது’

நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒரு மாற்றுத் திட்டம் உள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

உடனடி மரணத்தின் ஐந்து அறிகுறிகளைப் பற்றி புத்தர் பிரசங்கித்துள்ளார்.அதன் முதல் காட்சி தீப்பிழம்புகள் வெளியாகுவது அதை இந்த நாட்டில் கப்பல்கள் எரியும் போது கண்டோம். இரண்டாவதாக, இருளின் காட்சி.அதை நாட்டை மூடியதிலிருந்து கண்டோம்.மூன்றாவது இந்த நாட்களில் வனவிலங்குகள் மற்றும் காடுகளின் காட்சியாகும்.அதை தற்போது விலங்குகள் இறந்து காடழிப்பு போன்றவற்றில் காண்கிறோம்.நான்காவது உறவினர்களின் இறப்பு.அதை கொவிட்டால் 3000 பேர் இறந்ததில் கண்டோம் ஐந்தாவது சகுனங்களின் பார்வை மூலம் அரசாங்கம் மரணத்தின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு சுருக்கமாக கூறலாம்.

பணத்தை அச்சிடுவதில் எங்கள் நாடு முதலிடத்தில் உள்ளது. எரிவாய்வு விலை அதிகரிக்காவிட்டால் வங்கிக் கட்டமைப்பு சரிந்து விடும் என்றும் நாடு பொருளாதார மந்த நிலையில் மூழ்கிவிடும் என்றும் அமைச்சர் கம்மன்பில கூறினார். கஜமித்துரு மாபியா டட்லி போன்றவர்கள் முன்வந்ததால் ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் அவர்களின் கீழ் கொண்டு வரப்பட்டனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அரிசி தேவையையும் விலையையும் வெற்றிகரமாக நிர்வகித்தது. கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெற்றிகரமாக இதை முன்னெடுத்தார்.நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒரு மாற்றுத் திட்டம் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது சஜித் பிரேமதாச என்ற ஒரு நபர் மட்டுமல்ல.அவரைச் சுற்றி ஒரு திறமையான குழு உள்ளது. பொருளாதாரம் குறித்த பார்வை கொண்ட திறமையான நபர்கள் எங்களிடம் உள்ளனர்.கலாநிதி ஹர்ஷ டி சில்வா,எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாஷீம் போன்றவர்கள் எம்மிடம் உள்ளார்கள்.

ராஜபக்சக்கள் வேறொரு ராஜபக்சவை நியமிக்க முயற்சிக்கின்றனர். பசில் வருவதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை. 20 ஆவது திருத்த சமயத்தில் அவர் அமெரிக்க பிரஜை,அதை மாற்றாது தமது பாராளுமன்ற வருகைக்காக அதில் திருத்தங்களை கொண்டு வந்த நபர் அவர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட அரசாங்கம் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது. பலர் தமது இருக்கைகளை சுத்தம் செய்ய வேண்டி வரும். நம்மைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்..