அரசாங்கம் அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டிற்கு அழிவைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு இப்போது நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச கடன் சுமைகளால் வரலாற்றில் என்றுமில்லாத அளவு நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள இந்தப் பொருளாதார சரிவுக்கு தீர்வு காண அரசாங்கம் தயங்கக்கூடாது என்பது முதலாவது அடிப்படையாக இருந்தாலும், அரசாங்கத்திடம் நாட்டை மீட்கும் வேலைத்திட்டம் ஒன்று இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாhர்.