February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 43 மரணங்கள் பதிவு!

கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் ஜுன் 30 ஆம் திகதி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டின் கொவிட்டால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,120 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 260,904 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுக்கு உள்ளானோரில் 227,840 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.