இந்தியாவின் டெல்டா திரிபு வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் செயற்படாவிட்டால் நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் டெல்டா தொடர்பிலான போதிய புரிதலின்றியே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
தற்போதைய நிலையில் நாட்டில் தினமும் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில், டெல்டா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனவே டெல்டா வைரஸ் தொற்று தொடர்பில் அனைத்து பிரதேசங்களிலும் சரியான தகவலை வழங்க வேண்டும். டெல்டா தொடர்பிலான முழுமையான தகவல் தெரியாமலேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.