
மட்டக்களப்பில் உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று மட்டக்களப்பிற்கு சென்றிருந்தபோது, இடம்பெற்ற கூட்டத்திலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் இரண்டு எம்.பிக்கள் உள்ள போதும், அங்கு நடைபெறும் முக்கிய கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று சாணக்கியன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் சுட்டிக்காட்டினார்.
தாம் கூட்டங்களுக்கு அழைக்கப்படாமையினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எங்களிடம் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு தங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை என்றும், தங்களையும் கூட்டங்களுக்கு அழைத்தால் தமக்கும் முன்மொழிவுகளை முன்வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இன்றைய கூட்டத்தில் சாணக்கியன் பல திட்ட முன்மொழிவுகளை அமைச்சரிடம் கையளித்துள்ளார்.