November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உர இறக்குமதிக்கு செலவாகும் 80 ஆயிரம் மில்லியனை விவசாயிகளுக்கு வழங்குவோம்’

இரசாயன உர இறக்குமதிக்கு செலவாகும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய விவசாய அமைப்புகளின் மாவட்ட பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சேதன உரத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக வழங்குவதற்குத் தேவையான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குத் தேவையான சேதன உரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இந்நாட்டு தொழில்முனைவோருக்கும் வர்த்தக சமூகத்திற்கும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை தாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்றும் அதற்கான செலவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு விவசாயிகள் இதுவரை காலமும் பெற்று வந்த இலாபத்தில் குறை ஏற்பட இடமளிப்பதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

This slideshow requires JavaScript.