October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த தீர்மானத்துக்கு ஜம்இய்யதுல் உலமா கவலை

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்கள் உள்வாங்கப்படாத அமைச்சரவையின் தீர்மானங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும்படியும் இம்இய்யதுல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை கவனித்து, நாட்டு பிரஜைகளின் உரிமைகளையும் மதித்து, எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த ஒரு பொறிமுறை மூலம் சட்ட திருத்தம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்படி ஜம்இய்யதுல் உலமா அரசாங்கத்தையும் நீதி அமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளது.