January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடுகளை பயன்படுத்த தடை

பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்களின் கூரைகளுக்கு எஸ்படொஸ் (Asbestos) கூரைத் தகடுகளை பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

குறித்த விடயத்தை சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

எஸ்படொஸ் கூரைத் தகடுகளை தடை செய்யும் வேலைத் திட்டத்தை கிரமமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத் தகடுகளை பயன்படுத்துவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.