July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ‘சௌபாக்கிய உற்பத்தி கிராமம்’அங்குரார்ப்பணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் விதமாக யாழ்ப்பாணத்தில் ‘சௌபாக்கிய உற்பத்தி கிராமங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (01) இந்த செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களை நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு,  யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு  குழுவின் தலைவரான அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாரம்பரிய முறையிலான எள் எண்ணெய் உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.