அரச சேவையில் உள்ள வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது எல்லை 63 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பான யோசனை கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அனைத்து தர நிலைகளிலும் உள்ள வைத்திய அதிகாரிகளுக்குமான வயதெல்லையை 63 ஆக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் அரச சேவையில் வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.