May 28, 2025 9:18:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட்ஸ்அப், வைபர் செயலிகளுக்கு இணையான புதிய செயலியை கண்டுபிடித்த யாழ்.மாணவன்

யாழ்.இந்து கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியை தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.மிகத் துல்லியமான முறையில் படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன், இந்த செயலி மிகவும் அதிவிரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

60 MB அளவு கெபாசிட்டி கொண்ட இந்த மென்பொருளினை இணைய உலாவிகள் மூலம், பிளேஸ்ரோர் மூலமும் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.