தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளன.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பி., எம்.வேலுகுமார் எம்.பி., எம்.உதயகுமார் எம்.பி. ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும், ஜே.வி.பி.யின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.,பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமானால் அது முற்போக்கு சிந்தனையுடன், ஜனநாயகத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்கள் மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கொள்கை ரீதியில் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இந்தச் சந்திப்பு தொடரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.