January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ள அதேவேளை, அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.இந்தச் சம்பவம் புதன்கிழமை (30) இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன், குறைந்தது நால்வர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.