January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மீசாலையில் விபத்து; தென்மராட்சியின் பல பகுதிகள் இருளில் மூழ்கின

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து காரணமாக தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

யாழ்.-கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்த காரணத்தினால் கொடிகாமம்,மீசாலை மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.