November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுகதைக்கான பொதுநலவாய விருதை வென்ற இலங்கை எழுத்தாளர்

(Kanya D’Almeida)

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான பொதுநலவாய விருதை இலங்கையை சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான கான்யா டி அல்மெய்டா வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதலாவது இலங்கையராகவும் ஆசியாவின் இரண்டாவது நபராகவும் கான்யா டி அல்மெய்டா வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

6000 ற்கு மேற்பட்டோரிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் சிறந்த சிறுகதைக்கான விருதை கான்யா டி அல்மெய்டா வென்றுள்ளதாக பொதுநலவாய அறக்கட்டளை அறிவித்துள்ளது.

 

இது குறித்து பொதுநலவாய அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
‘இலங்கையின் எழுத்தாளர் கான்யா டி அல்மெய்டா 2021 கொமன்வெல்த் சிறுகதை பரிசை வென்றுள்ளார்.கான்யா டி வென்ற கதை, வீட்டுப் பணிப் பெண்ணைப் பற்றியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய அறக்கட்டளை எனும் அமைப்பு பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியினை 2012 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.