January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் நேற்று (29)கொரோனா தொற்றால் 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் குறைந்த இருவரும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 12 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 34 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 31 பெண்களும் 16 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களிடையே ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், நேற்று பதிவான மரணங்களில் பெண்களின் எண்ணிக்கை உயர்வாக உள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினத்தில் (30) மேலும் 1,717  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 257,225 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையும் 28,243 ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 225,952 ஆக உயர்வடைந்துள்ளது.