எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கப்பல் தீ விபத்தால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து நீதிமன்றத்துக்கு விளக்கமளிக்கும் போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
176 கடல் ஆமைகளும், 20 டொல்பின்களும் 4 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கப்பலின் கொள்கலன்களில் இருந்த இரசாயனப் பொருட்கள் கடலில் கலந்ததால் கடல்சார் சூழல் பாதிப்படைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.