
ஆதிவாசிகளின் தலைவரான ஊறுவரிகே வன்னியலத்தோ கொரோனா தடுப்பூசியை இன்று (30) பெற்றுக் கொண்டார்.
இதன்மூலம் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது ஆதிவாசி அவராவார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடமொன்றில் வைத்தே அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எசல பெரஹெராவில் பங்கேற்கும் கலைஞர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு இதன்போது தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடத்தப்படும் வருடாந்த எசல பெரஹெராவின் தொடக்க விழாக்களில் பங்கேற்கவுள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேவேளை, முற்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாக வருடாந்த எசல பெரஹேராவில் பங்கேற்கும் ஏனையவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.