
தனது தலைமையில் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்முடன் இணையவுள்ளனர்.
மேலும், தற்போதைய கொவிட் பரவல் நிலைமை நிறைவுக்கு வந்தவுடன் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (29) சிறுவர் இல்லமொன்றுக்கு உணவு வழங்கியதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.