January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க பதவியேற்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க இன்று பதவியேற்றுள்ளார்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த ஜயம்பதி பண்டார, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 1969 ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்துகொண்டார்.

ஹட்சன் சமரசிங்க, இதற்கு முன்னர் பல தடவைகளும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.