January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய கிழக்கு நாடுகளின் பயணிகளுக்கான தடையை நீக்கியது இலங்கை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை திட்டமிட்டிருந்த தற்காலிக தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து ஜுலை முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு கொரோனா தடுப்பு மத்திய நிலையம் வழிகாட்டல் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வருவதற்கு 96 மணிநேரத்துக்குள் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் வசதியை அல்லது கட்டுப்பாட்டுடன் கூடிய பயண ஒழுங்கு விதியைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.