May 29, 2025 5:10:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோரின் உறவினர்களினால் சர்வதேச நீதிகோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எமது உறவுகள் எங்கே?’, ‘சர்வதேசமே நீதியை பெற்றுக்கொடு’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார ஒழுங்குவிதிகளுடன், சமூக இடைவெளியை பேணி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.