தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு, பள்ளிமுல்ல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்ட 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை சோதனையிட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸார் அங்கு சென்றவேளை ஏற்கனவே பலர் அங்கிருந்து சென்று விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் குறித்த நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர், பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.