January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

இலங்கை முழுவதும் ரயில்வே ஊழியர்களினால் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர் தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நண்பகல் முதல் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டை அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 8 மணி முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.