இலங்கை மத்திய வங்கி ஒரே நாளில் 208.45 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அச்சிடப்பட்ட 208.45 பில்லியன் ரூபாய்களே, இலங்கை ஒரே நாளில் அச்சிட்ட அதிகூடிய தொகையாகும்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல்கள் காரணமாக வரி மூலமான வருமானம் குறைந்துள்ளதால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதாக தெரியவருகிறது.
இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் 23 பில்லியன் ரூபாய்களையும் அச்சிட்டுள்ளது.
இவ்வாறு பணம் அச்சிடப்படுவதால் மத்திய வங்கியின் மொத்த பிணைப் பங்குகள் ஒரு டிரில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.