
இலங்கை முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 8 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இதில் ரயில் சாரதிகளும் இணைத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் ரயில் அனுமதிப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று காலை முதல் பஸ் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.