கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 4 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மொனராகலை மாவட்டத்தில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனுல்வெல பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்லவ கிராமசேவகர் பிரிவின் நியதுருபொல இலக்கம் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தோட்ட வீட்டுத்திட்டப் பகுதி, தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னகம கிராமசேவகர் பிரிவின் தேவாலகந்த தோட்டப் பகுதி மற்றும் கொடம்பல கிராம சேவகர் பிரிவின் பபேகம தோட்டப் பகுதி ஆகியன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட் உபட்ட எலதூவ கிராம சேவகர் பிரிவின் எலதூவ தோட்டப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவிதுரு தோட்டம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.