January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நயினாதீவை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வெள்ளாந்தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 291 ஆக உயர்வடைந்துள்ளது.