
அரசியலில் இருந்து ஓய்வு பெற்று புத்தகம் எழுதுவது, திரைப்படம் எடுப்பது போன்ற எனக்கு தெரிந்த துறைகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் எனவும், அரசாங்கத்தில் இருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதனை நான் முன்னெடுத்து வருகின்றேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இப்போதும் நாம் பேரளவு அமைச்சர்களாகவே உள்ளோம்.எனது அமைச்சின் கீழ் இயங்க வேண்டிய பல நிறுவனங்கள் வேறு சிலரது கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றது. ஆகவே நான் வகிக்கும் அமைச்சை வேறு ஒருவருக்கு கொடுப்பதை பெரிய விடயமாக நான் கருதவில்லை. அதுமட்டுமல்ல ஒரு காலகட்டத்துடன் சகலரும் ஓய்வு குறிந்து சிந்திக்க வேண்டும். நானும் அவ்வாறே நினைக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.