January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஜூன் மாதத்தில் 1501 மரணங்கள்; ஆராய்கிறது நிபுணர் குழு

நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றினால் இதுவரை 3030  மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மாத்திரம் 1501 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்னவென ஆராய விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவினர் கடந்த காலத்தில் வழங்கிய தரவுகளில் சில தவறுகள் இருந்துள்ளன.

ஆகவே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த தவறான தரவுகளும் காரணமாக இருக்கலாம். எனவே இது குறித்து ஆராயவும் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், வீடுகளில் ஏற்படும் மரணங்களை பொறுத்தவரை, ஒருவர் இறந்தால் அவரது வீட்டில் எவருக்கும் கொவிட் இல்லையென்றால், குறித்த வீடு இருக்கும் பிரதேசத்தில் கொவிட் அச்சுறுத்தல் இல்லையென்றால் அந்த மரணத்தை கொவிட் மரணமாக அடையாளப்படுத்த முடியாது என தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.