
(File Photo)
இலங்கையின் மேல் மாகாணத்தில் மால்கள் மற்றும் துணிக்கடைகளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதனால் கொவிட் -19 வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து சுகாதார விதிமுறைகளை மீறி செயல்படும் துணிக்கடைகளை மூட மேல் மாகாண மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொறுப்பின்றி செயற்படும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி வணிக வளாகங்கள் மற்றும் துணிக்கடைகள் மூடப்பட வேண்டும் எனவும் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்தார்.