இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் அடுத்த 10 வாரங்களில் டெல்டா வைரஸ் வகை நாட்டின் பிரதான வைரஸ் தொற்றாக மாறலாம் என சுகாதார சேவை தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே எச்சரித்தார்.
இன்று (29) ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கொவிட் -19 வைரஸால் இறப்பவர்களில் பெரும்பாலோனர் பெரியவர்களாக இருப்பதால், அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தெளிவாக முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.
நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான 12 கர்ப்பிணித் தாய்மார்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் இன்னும் கொரோனா ஆபத்து நீங்கவில்லை. ஒரு புதிய எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.