June 15, 2025 21:34:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ- அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை ஆராய எதிர்பார்ப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.