பஸில் ராஜபக்ஷவினலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்று கூறுவார்களாக இருந்தால், இது ஜனாதிபதியும் பிரதமரும் தோல்வியடைந்துள்ளனர் என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையை சௌபாக்கியத்தை நோக்கி கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ஷவால் முடியாது. கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே அதனை செய்ய முடியும் என்றும் ஆரம்பத்தில் கூறியவர்கள், இப்போது பஸில் ராஜபக்ஷவினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்று கூறி வருகின்றனர் என்று அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் ஜனாதிபதியும், பிரதமரும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனர் என்றே அர்த்தப்படும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த அரசாங்கத்தை ஆரம்பத்தில் இருந்தே பஸில் ராஜபக்ஷ வழிநடத்தியுள்ளதுடன், நாட்டின் வறுமை ஒழிப்பு செயலணியின் பிரதானியாகவும் இருந்துள்ளார். இதனால் அவரும் இதில் தோல்வியடைந்தவரே எனவும் தெரிவித்துள்ள அனுரகுமார திஸாநயக்க, இவ்வாறான குடும்பத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.