எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்த பிளாஸ்டிக் வகைகளில் சுமார் 60 வீதமானவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இதனால், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, தீப்பற்றியதை அடுத்து கடலுக்குள் மூழ்கிய இக்கப்பலில் 190 க்கும் கூடுதலான பொருட்கள் காணப்பட்டதுடன், அவற்றில் கூடுதலாக பிளாஸ்டிக் வகைகள் காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கரையொதுங்கிய ஆயிரத்து 34 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 கொள்கலன்களில் வத்தளை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இன்று (29) நடைபெற்ற சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த தகவலைத் தெரிவித்தார்.