July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் உணவுத் தட்டுப்பாடொன்று நிலவுகிறதா?’: அரசாங்கம் விளக்கம்

Rice Common Image

இலங்கையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு கையிருப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், நாட்டின் உணவுக் கையிருப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு கையிருப்பில் இருந்தாலும், அதனைத் தொடர்ந்தும் பேணிச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுக் கையிருப்பு தொடர்பாகக் கூறப்படும் விடயங்களில் ஒரு பகுதி சரியாக இருந்தாலும், அமைச்சரவை தொடர்ந்தும் அதுதொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான வருமான வழிகள் தடைப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் உணவுக் கையிருப்பை நிர்வகிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை செலுத்த வேண்டியுள்ள நிலையிலும், உணவுக் கையிருப்பு தொடர்பான சவாலைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.