அம்பாறை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 3 பெண் சிசுக்களை பெற்றெடுத்துள்ளார்.
மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வைத்தியசாலையில் நிலவிய இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு நாட்களின் பின்னர் கல்முனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த பெண்ணுக்கு மகப்பேற்று நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான மருத்துவ குழுவினர் சத்திர சிகிச்சை மேற்கொண்டர்.
இதன்போதே, அந்தப் பெண் ஒரே சூலில் மூன்று சிசுக்களை பெற்றெடுத்தார். 31-வயதான தாயும் சிசுக்களும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தப் பெண்ணின் கணவர் ஒரு கடற்தொழிலாளியாவார். இந்தத் தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளன.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இந்த ஆண்டில் ஒரே சூலில் 3 சிசுக்கள் பிறந்துள்ள 4 வது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.