November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவில் இருந்து பேராசிரியர் நீலிகா மலவிகே இராஜினாமா

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே, மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த சுயாதீன நிபுணர் ஆலோசனை  குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் அவர் குறித்த பதவியை இராஜினாமா செய்ததாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கொழும்பு வடக்கு (ராகம) மருத்துவ பீடத்தின் இணைப் பேராசிரியர் ஏ.பத்மேஷ் இந்தக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தார்.

இதனிடையே, குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம, பேராசிரியர் ரஜீவ டி சில்வா, பேராசிரியர் காந்தி நாணயக்கார, பேராசிரியர் சன்ன ரணசிங்க, பேராசிரியர் சரோஜ் ஜயசிங்க, பேராசிரியர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் வைத்தியர் ஹசித திசேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழுவின் பணி உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தடுப்பூசி குறித்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்வதும், இலங்கையில் தடுப்பூசி வேலைத்திட்டத்தை பரிந்துரைப்பதும் ஆகும்.