January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சர்வதேச பிணைமுறிகளில் முதலிட சில நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கை அரசாங்கம் சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்காக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள கம்பனிகளுக்கு வசதிகளை வகுத்துக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் சிலவும் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்கு இலங்கைக்கு வெளியே கடன் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய ஒட்டுமொத்த நன்மைகளைக் கருத்தில்கொண்டு, ஒரு சில நிபந்தனைகளுக்கமைய, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளையும் இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகளையும் கொள்வனவு செய்வதற்காக அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்கவும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) உறுப்புரையின் கீழ் கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சரராக பிரதமர் மகிந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.