July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்பும் போது மேலதிக வட்டி’: அரசாங்கம்

வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் 2020 ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விசேட நிலையான கணக்கு ஆரம்பிப்பதற்கும், குறித்த கணக்குகளில் காணப்படும் வைப்புக்களைத் தொடர்ந்து பேணுவதற்காகவும் மேலதிக வட்டியை செலுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள ஏற்பாடுகளின் கீழ் 6 மாதம் அல்லது 12 மாத காலத்துடன் விசேட வைப்புக் கணக்குகளில் மீளவும் முதலிடுவதற்கும், அவ்வாறான விசேட வைப்புக்கணக்குகளுக்கான மேலதிக வட்டியை வழங்குவதற்கும் இயலுமை உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனாலும், 12 மாதங்களுக்கு அதிகமாக மீளவும் முதலிடப்படும் விசேட வைப்புக் கணக்குகளுக்காக மேலதிக வட்டி வீதத்தைச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் இன்மையால், அதற்காக ஏற்பாடுகளை உள்வாங்கி 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) உறுப்புரைக்கமைய கட்டளையை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சரான, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.