July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரவுகளை நம்பி முன்னாயத்த வேலைத் திட்டத்தை கைவிட வேண்டாம்; வைத்தியர் உபுல் ரோஹன

கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும்,அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.தரவுகளில் இதனை நிரூபிக்கும் வேளையில் கொவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

‘நாடு திறக்கப்பட்டதில் இருந்து வெளிவரும் தரவுகளை பார்த்தால் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று குறைவடைந்துள்ளதாகவே தென்படுகின்றது.ஆனால் உண்மை அதுவல்ல.கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக தரவுகளில் வெளிப்பட்டாலும், அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத விதமான கொவிட் வைரஸ் பரவல் தாக்கம் ஒன்றினை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.

தரவுகளில் இதனை நிரூபிக்கும் வேளையில் கொவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும்.மரணங்களும் அதிகரித்திருக்கும். நாட்டில் கடந்த மூன்று மாத கால மரணங்களை பார்த்தால் அவற்றில் கொவிட் மரணங்களே அதிகமாக பதிவாகியுள்ளது.வீடுகளில் மரணிக்கும் எண்ணிக்கையும் அதிகமாகும்.எனவே சுகாதார தரப்பு இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.