முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க கோரும் கடிதம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஏ. ஜகத் குமார தெரிவித்தார்.
இந்த கடிதத்தில் 113 க்கும் மேற்பட்ட அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்க ஆளும்கட்சி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக, கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.