இலங்கையில் “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 வது டோஸாக “ஃபைசர்” அல்லது “மொடர்னா” கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொற்று நோய் தொடர்பான விசேட நிபுணர் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரம் “ஃபைசர்” தடுப்பூசிகளும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒரு மில்லியன் “மொடர்னா” தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி இந்த தடுப்பூசிகளை “அஸ்ட்ரா செனிகா”தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டு 2 வது தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.