February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விலையேற்றங்களை கண்டித்து கல்முனையில் தீப்பந்த போராட்டம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரில் இன்று இரவு தீப்பந்த போராட்டமொன்று நடத்தப்பட்டது.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஜேவிபியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.