January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடுகள் சிலவற்றில் இருந்து பயணிகளுக்கு இலங்கை வரத் தடை விதிப்பு!

கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களினுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும் மற்றும் அந்த நாடுகளின் வழியாக வரும் ஏனைய பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என சிவில் விமான சேவை அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடையானது ஜுன் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.