
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில் சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி ‘நாய்’ என விளித்து பேசியதாக தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த்துக்கு ஒரு மாத காலம் சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு சபை முதல்வரால் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்திற்கு முரணானது எனவும், இதனால் தடையை நீக்க நடவடிக்கையெடுக்குமாறும் குறிப்பிட்டு வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தில் மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.