இலங்கையின் கொரோனா தடுப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் டொமினிக் பேக்லர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து, உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
சுவிஸ் அரசாங்கம் இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்த சுவிஸ் அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் மகிந்த நன்றி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு உதவிகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த சுவிஸ் வெளியுறவு அமைச்சர், ‘கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பலமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.