கஹதுடுவ − ஜயலியகம பகுதியில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ் தெரிவித்துள்ளார்.
47 வயதான குறித்த நபர், கொழும்பு − கொம்பனித் தெரு பகுதியிலுள்ள பிரதான கட்டுமான தளமொன்றில் பணியாற்றி வருபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலன்னறுவை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, குறித்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.